இந்தியாவும் - ஹேப்பி ஸ்ட்ரீட்டும் :
இந்தியா என்பது ஒரு சாதி சமூகம். பிறகு மத சமூகம். இங்கே சாதி தான் பிரதானம். சாதியை காக்கதான் இங்கே மதம் இருக்கிறது. மதம் காக்க கடவுள் இருப்பதாய் நம்புகிறார்கள். இந்த தேசத்தின் அடிப்படை சாதி பிறகு மதம்.
மனிதன் மண்ணாங்கட்டி எல்லாம் அப்புறம் தான்.
அப்படியான ஒரு மூட தேசத்தில் கொண்டாட்டங்கள் எதன் அடிப்படையில் இருக்கும் ? சாதியின் அடிப்படையில். மதத்தின் அடிப்படையில். இரண்டுமே முட்டாள்தன அடிப்படையிலும், மூடத்தன கூறுகளாலும் நிறைந்திருக்கும். அங்கே மனிதராய் இணைய வாய்ப்பில்லை. சாதியாய் இணையலாம். மதமாய் இணையலாம்.
ஒவ்வொரு ஊரியிலும் அரசின் ஆலயங்கள் இருக்கும். தனியார் ஆலயங்கள் இருக்கும். அரசு ஆலய கொண்டாடங்களில் அதிகாரம் ( பணம், அரசியல், சாதி ) மட்டுமே முக்கியத்துவம் பெறும். தனியார் ஆலயங்களில் சொல்லவே வேண்டாம் சாதிதான் கொண்டாட்டத்தில் முதன்மை பெறும். பக்தி என்ற பெயரில், வழிபாடு என்ற பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். அவ்ளோதான். அதில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது. இதே தான் ஊர்த்திருவிழாவிலும்.
தெருக்கட்டு பொங்கல் என கொண்டாடுவதும் பெரும்பாலும் ஒரே சாதிக்கட்டு அதிகம் இருக்கும் தெருக்களில் தான்... இதுவும் ஒரு விதத்தில் சாதி என்ற நாய்க்கு பக்தி என பிஸ்கட் போடும் வழக்கம் தான். அங்கும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. விதிவிலக்காக சில எலைட் ஏரியாக்கள் உண்டு. ஆனாலும் அங்கும் அது நாடகதனம் தான்.
எனில் இங்கே உண்மையான கொண்டாட்டங்களுக்கு ஏது வழி..?
கொண்டாட்டங்களுக்கு வழி இல்லாத சமூகம் சினிமா மாயையிலும் பெட்டிங் கிரிக்கெட்டிலும் தன்னை தொலைத்து கத்திக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் இவர்கள் மனிதர்களாக ஒரளவு இணைய முடிகிறது. அங்கும் விஷ வேலைகள் நடந்துகொண்டு இருந்தாலும் அது முழுமையடைய இன்னும் பல பத்தாண்டுகள் ஆகுமென நம்புகிறேன்.
இந்த சூழலில் தான் “ ஹேப்பி ஸ்டீரிட்” நிகழ்ச்சிகள் நடக்கிறது: விளையாட்டு, போட்டிகள், இசைநிகழ்ச்சிகள் என சிறுவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் படி அது இருக்கிறது. அது ஒரு கொண்டாட்ட மனநிலையில் மனிதர்களை மாற்றுகிறது. விருப்பம் ஆர்வம் இருந்தால் நீங்கள் அங்கே பங்கேற்கலாம். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்தமாய் கொண்டாடி தீர்க்கலாம்.
கோவில் விழாக்களில் நீங்கள் பார்க்காத ஆபாச ஆட்டங்களா ? கட்சி மேடைகளில் நீங்கள் பார்க்காத ஆபாச ஆட்டங்களா ? இவையெல்லாம் விட அங்கே எதுவும் மோசமாக நடந்துவிடவில்லை.
சிலர் உளருவது போல சினிமாவை எடுத்துவிட்டால் இந்த தேசத்தில் மீதம் இருப்பது சாதி கொண்டாட்டம் மட்டுந்தான். அவர்கள் நோக்கமும் அதுதான்.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் இறப்பிற்கு கூடியது மதக்கூட்டமா? சாதிக்கூட்டமா ? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது இவர்கள் ஏன் பொதுக் கொண்ட்டாட்டங்களை மறுக்கிறார்கள் என்ற உண்மை.
மக்களை வெறும் மனிதர்களாக கூடுவதற்கு என்னென்ன வழிமுறைகளை நாம் கண்டு பிடித்தாலும் அதனை வெறுக்க அல்லது அழிக்க சங்கீகள் கூட்டமாய் கிளம்பி வருவார்கள். கலாச்சாரம் பண்பாடு என பேசி வருவார்கள். அப்படி வரும் போது நீங்கள் அவர்களிடம் பேசி நேரம் விரையம் செய்யாதீர்கள் உங்கள் நடுவிரல் அழகாய் இருக்கிறதா என கேளுங்கள். அது போதும்.
கருத்துகள்
கருத்துரையிடுக